இயற்கையான முறையில் அரைத்து வைக்கும் மருதாணியின் மருத்துவ குணங்கள் !!

by Column Editor

செயற்கை மருதாணி பவுடரில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் கலந்துள்ளதால் கைகளில் அலர்ஜி, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலுக்கு அதிகப்படியான வெப்பத்தினை கொடுக்கிறது.

கடைகளில் பேக் செய்யப்பட்ட மெஹந்தி உடலுக்கு குளிர்ச்சியை தராது. மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள், வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.

முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.

Related Posts

Leave a Comment