காய்கறிகளில் உள்ள நன்மைகள் …!

by Lifestyle Editor

சுரைக்காய் :

சுரைக்காயில் 92% நீரினால் ஆனது. அதிக நீர்ச்சத்து குறைவான காய்கறி என்பதால் உடல் எடை குறைப்பதற்கு சிறந்த காய்கறியாக இது திகழ்கிறது. மேலும் கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது.

பீர்க்கங்காய் :

பீர்க்கங்காயில் பல விதமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இது குறைந்த கலோரியைக் கொண்ட காய் என்பதால் உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் இது பலவிதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

கோவக்காய் :

கோவக்காய் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் பொட்டாசியத்தின் முக்கிய மூலமாக கருதப்படுகிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

பாகற்காய் :

கசப்பான சுவையைக் கொண்ட இந்த அற்புத காயில் உடலுக்கு நன்மை சேர்க்கக்கூடிய பல விதமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இவை உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை அளிக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபோலேட், ஃபைபர் மற்றும் வைட்டமின் சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த காயாக திகழ்கிறது.

சாம்பல் பூசணிக்காய் :

96% நீரினால் மட்டுமே ஆன இந்த குறைந்த கலோரியைக் கொண்ட காய் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்து என்றே கூறலாம். அந்த அளவிற்கு உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இது திகழ்கிறது. மேலும் இது நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை அளிக்கும் முக்கிய மூலம் எனக் கூறலாம்.

Related Posts

Leave a Comment