தோசை கல்லில் ஒட்டாமல் சுட்டெடுக்க அசத்தல் டிப்ஸ் ..!!

by Lifestyle Editor

ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மாவை நேரடியாக அப்படியே அடுத்து தோசை சுடுவார்கள். இது தவறான பழக்கம். தோசை சுடப்போகிறீர்கள் எனில் மாவை 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பாகவே எடுத்து வெளியே வைத்துவிடுங்கள்.

இரும்பு தவாவில் தோசை சுட்டு சாப்பிட்டால் அது ஒரு தனி சுவைதான். ஆனால் அதை சரியான முறையில் பராமரித்தால்தான் தோசை நன்கு மொறுவலாக வரும். ஆனால் பெரும்பாலானோருக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. எனவே அதில் எப்போது தோசை சுட்டாலும் கல்லில் அடியோடு ஒட்டிக்கொண்டு எடுக்கவே சிரமமாக இருக்கும். எனவேதான் பலரும் நான் ஸ்டிக் தவா வாங்கி பயன்படுத்துவார்கள். இனி அந்த கவலை வேண்டாம். இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. எந்த தோசை கல்லாக இருந்தாலும் தோசை சூப்பர் சாஃப்டாக வரும்.

தோசை சுடுவதற்கு முன் தோசை கல் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தோசை கல்லில் படிந்திருக்கும் தூசு, கடைசியாக சுட்ட தோசையின் மிச்சம், அடி பிடித்த துகள்கள் இருப்பின் அவற்றை முற்றிலுமாக நீக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதற்காக தோசை கரண்டியை போட்டு தேய்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால் கல்லில் கீரல் விழுந்து தோசை வராது. எனவே காட்டன் துணி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

கல்லை சுத்தம் செய்த பின் அடுத்த ஸ்டெப்பாக உருளைகிழங்கு அல்லது வெங்காயத்தின் கால் பகுதியை நறுக்கிவிட்டு எண்ணெயில் முக்கி நன்கு தோசைக்கல்லில் தேய்க்கவும். அதிக எண்ணெய் விட்டு தேய்க்கக் கூடாது பின் தோசை மாவு கல்லில் ஒட்டாது. எனவே ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்த பின் மாவு ஊற்றி வட்டமாக சுற்றுங்கள். பின் மேலே எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சிவந்ததும் தோசையை கரண்டியால் லாவகமாக எடுக்க அழகாக ஒட்டாமல் வந்துவிடும்.

தோசை சரியாக வராததற்கு தண்ணீர் பதம் சரியாக இல்லாததும் ஒரு காரணம். அதாவது நீங்கள் தோசை சுடுவதாக இருந்தால் அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும். எனவே சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

நீங்கள் தோசை கல்லில் மாவு ஊற்றுவதற்கு முன் எண்ணெய் அதிகமாக ஊற்றி தேய்த்துவிட்டால் மாவு தோசைக்கல்லில் ஒட்டாது. எனவே அந்த தவறை செய்யாதீர்கள்.

Related Posts

Leave a Comment