சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா..

by Editor News

பொதுவாகவே தொன்று தொட்டு திருவிழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் வாழைமரம் கட்டுவது வழக்கம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொன்ன காரியம் எதுவும் தவறாக இருந்தது இல்லை.

எவ்வளவோ மரங்கள் இருந்தும் நம்முடைய வீட்டின் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா? வீட்டில் நடக்கும் சுப காரியங்களின் அடையாளமாக வாழை மரத்தைக் கட்டுகிறோம்.

குறிப்பாக வாழைமரம் கட்டுவது தமிழர்கள் மத்தியில் ஒரு மங்களகரமான விடயமாகும். அதுமட்டுமல்லாமல் மணமக்கள் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்ற மரபிலே வாழை மரம் திருமண விழாக்களில் கட்டப்படுகின்றது.

இது தமிழர்கள் மத்தியில் ஒரு மங்களகரமான விடயமாக கருதப்படுகின்றது. நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நிச்சயம் தகுந்த காரணம் இருக்கும். அவர்கள் எந்த ஒரு விடயத்தையும் வெறுமனே அழகுக்காக மட்டும் செய்வது கிடையாது.

அந்தவகையில் விழாக்களின் போது வாழை மரம் கட்டுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் குறித்து இந்த பதில் பார்க்கலாம்.

அறிவியல் விளக்கம் :

வாழை இலையும் வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள்.

இது சிறந்த நச்சு முறிப்பானாக செயற்படுகின்றது. வாழையிலையின் மேல் காணப்படும் பச்சைத் தன்மை குளோரோபில் எனும் வேதிப்பொருளால் ஆனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

அதனால் வாழை இலையில் சாப்பிடுவதால் நோய்கள் இன்றி நீண்ட நாட்கள் ஆராக்கியமாக வாழ முடியும். வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மிகச்சிறந்த கிருமி நாசினியாக தொழிற்படுகின்றது.

இது பாக்டீறியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.

விழாக்களின் போது ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள், போவார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வெளிச்சுவாசத்தின் மூலம் பெறப்படும் கார்பன் டைஆக்சைட்டு காற்றில் கலக்கும். அதனை சமநிலைப்படுத்தவே வாழை மரங்கள் கட்டப்பட்டன.

அத்துடன் கூட்டம் அதிகப்படியாகச் சேரும்போது அவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை ஒன்றாகச் சேரும்போது ஒருவிதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு தீர்வாக வாழை மரங்கள் கட்டப்படுகின்றது.

பொதுவாகவே மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் ஏற்படுகின்றது. இதனால் தான் திருவிழாக்களின் போது வீதி முழுவதும் வாழை மரம் கட்டப்படுகின்றது.

திருமண வீடுகளிலும் முக்கிய மக்கள் கூடும் விழாக்கள் அனைத்திலும் முன்னைய காலத்தில் வாழை மரம் கட்டப்பட்டமைக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டமைக்கும் பின்னால் உள்ள வியக்க வைக்கும் துள்ளியமான அறிவியல் காரணம் இதுதான்.

Related Posts

Leave a Comment