வெள்ளரி தோலின் நன்மைகள் ..

by Lifestyle Editor

வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேபோல் அதன் தோலில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்தும் இதில் ஏராளமாக உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வயிற்றுப் பிரச்சனைகளை நீக்குவதுடன், கண்பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது. அந்த வகையில், வெள்ளரிக்காய் தோலை சமையல் குறிப்புகளில் பயன்படுத்தினால், பல வகைகளில் நன்மை கிடைக்கும்.

காரமான சட்னி செய்யுங்கள் :

வெள்ளரிக்காய் தோலில், நீங்கள் கார சட்னி செய்யலாம். இதற்காக, ஒரு கிண்ணத்தில் வெள்ளரி தோல்களை சீவிக்கொள்ளுங்க. இப்போது அரை கப் புதினா இலைகள், அரை கப் வெள்ளரி, அரை கப் வெள்ளரி தோல், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது அதை ஒரு பாத்திரத்தில் வழித்து வைக்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து கலந்துவிடுங்கள். நீங்கள் விரும்பினால், அதனுடன் நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டும் சேர்க்கலாம். அவ்வளவுதான் உங்கள் சுவையான சட்னி தயார். இதை ரொட்டி, சாதம், பரோட்டாவுடன் சாப்பிடலாம்.

வெள்ளரி பீல் சிப்ஸ் :

வீட்டிலேயே எளிதான முறையில் வெள்ளரிக்காய் தோலில் சிப்ஸ் செய்யலாம். இதற்கு, வெள்ளரிக்காய் தோல் சீவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை எண்ணெயில் மொறுமொறுப்பாகும் வரை சிவக்க வறுக்கவும். ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவி சிப்ஸை சாப்பிடலாம்.

தோல் பராமரிப்புக்காக :

வெள்ளரிக்காய் தோலில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. மிக்ஸியில் வெள்ளரி தோல்களை அரைக்கவும், விரும்பினால் தயிர் கொஞ்சம் சேர்த்து அரைக்கலாம். இப்போது அதை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இப்போது உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Related Posts

Leave a Comment