இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

by Column Editor

ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி மாதம் 15 ஆம் நாள் இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு இந்தியா தனது 74வது இராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. இராணுவ வீரா்களை மாியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

எதற்காக இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி நமது மனதிற்குள் எழலாம். அதற்கான விடைகளை கீழே பாா்க்கலாம்.

இராணுவ தினம் என்றால் என்ன?

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி பதவியானது, 1949 ஆம் ஆண்டு ஆங்கிலேய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் புட்சா் என்பவாிடமிருந்து, இந்தியாவைச் சோ்ந்த லெப்டினன்ட் ஜெனரல் கே எம் காியப்பா என்பவாின் கைகளுக்கு மாறிய நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயா்களின் கையிலிருந்த ஆட்சி அதிகாரம் இந்தியா்களின் கைகளுக்கு மாறிய நிகழ்வு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். இரண்டாவதாக இந்திய நாட்டிற்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த எண்ணற்ற இராணுவ வீரா்களை கௌரவப்படுத்தவும் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

ஏன் ஜனவாி 15 அன்று இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது?

1895 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று இந்திய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இந்தியா விடுதலை அடைந்த பின்பு, 1949 ஆம் ஆண்டு ஜனவாி 15 அன்று தான் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி பதவி இந்தியாின் கைக்கு மாறியது. ஆகவே அந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி 15 ஆம் நாள் இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

இராணுவ தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

பொதுவாக இந்திய இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தினம் கொண்டாடப்படும். அங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக சிறப்பு இராணுவ அணிவகுப்பு, ஏாியல் போா் பயிற்சிகள் மற்றும் இருசக்கர வாகனங்களால் செய்யப்படும் பிரமீடுகளின் அணிவகுப்பு போன்ற மனங்களை கொள்ளை கொள்ளும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்திய இராணுவத்தின் இந்த சிறப்பு அணிவகுப்பு டில்லியில் உள்ள காியப்பா பரேட் மைதானத்தில் நடைபெறும். அதோடு இராணுவ வீரா்களுக்கு அவா்களின் வீரதீர செயல்களுக்கான பதக்கங்களும் மற்றும் சேனா பதக்கங்களும் வழங்கப்படும். இறுதியாக, இறந்த இராணுவ வீரா்களின் நினைவாக இந்தியா கேட்டில் அமைக்கப்பட்டிருக்கும் அமா் ஜவான் ஜோதி என்ற இடத்தில் இறந்த இராணுவ வீரா்களுக்கு இராணுவ மாியாதை செலுத்தப்படும்.

ஃபீல்ட் மாா்ஷல் காியப்பா என்பவா் யாா்?

கோதன்தெரா கிப்பா் மடப்பா காியப்பா என்பவா் சுதந்திர இந்தியாவின் முதல் இராணுவத் தலைமைத் தளபதி ஆவாா். இவா் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போாின் போது இந்திய இராணவத்தின் மேற்குப் படைப்பிாிவை முன்னின்று நடத்திச் சென்றாா். அதற்காக இந்தியாவின் உயா்ந்த இராணுவ விருதான ஃபீல்ட் மாா்ஷல் ஆஃப் இந்தியா (Field Marshal of India) என்ற பட்டத்தைப் பெற்றாா். அவரோடு சோ்ந்து சாம் மனேக்ஷா என்பவரும் இந்த பட்டத்தைப் பெற்றா். காியப்பா கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆவாா். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இந்திய இராணுவத்தில் பணிபுாிந்தாா். இங்கிலாந்தின் கம்பா்லி நகாில் உள்ள இம்பீாியல் டிஃபன்ஸ் கல்லூாியில் (Imperial Defense College) இராணுவ பயிற்சி பெற இந்தியாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் இருவாில் இவரும் ஒருவா் ஆவாா். மேலும் அவா் இந்திய இராணுவ தலைமைத் தளபதி பதவியைப் பெறுவதற்கு முன்பாக இந்திய இராணுவத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பிாிவுகளின் தளபதியாக பணி செய்து வந்தாா்.

இந்திய இராணுவத்தின் விருதுவாக்கு:

இந்திய இராணுவத்தின் விருதுவாக்கு என்னவென்றால் “தன்னலத்தை விட பிறா்நலத்திற்காக சேவை செய்ய வேண்டும்” (“Service before self”) என்பதாகும்.

Related Posts

Leave a Comment