சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்கள் ..

by Lifestyle Editor

நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதற்கு அவர்கள் தங்கள் உணவில் இனிப்பு சுவை குறைவான பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை ஏற்றாத 10 பழங்களைப் பற்றியே இப்போது பார்க்கப் போகிறோம்.

பெர்ரி வகை பழங்கள் :

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி எனப் பல வகையான பெர்ரி பழங்கள் குறைவான இனிப்பு சுவையை கொண்டது. மேலும் இந்தப் பெர்ரி பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதனால் டயாபடீஸ் நோயாளிகள் சாப்பிடுவதற்கு சிறந்த பழமாக இது இருக்கும்.

ஆப்பிள் பழம் :

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறுவார்கள். அந்தளவிற்கு நம் உடலுக்கு தேவையான பல சத்துகள் ஆப்பிள் பழத்தில் உள்ளது. மிதமான அளவு சர்க்கரை இருந்தாலும் ஆப்பிள் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. ஆகையால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம்.

பேரிக்காய் :

நாம் இதற்கு முன் பார்த்த இரண்டு பழங்களைப் போலவே பேரிக்காயிலும் குறைவான சர்க்கரையும் அதிக நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இந்தப் பழத்தை சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாக இருப்பதால் மாலை நேர ஸ்னாக்ஸாக இதை சாப்பிடலாம்.

செர்ரி பழங்கள் :

செர்ரி பழங்கள் சுவையாக இருப்பதோடு சர்க்கரை அளவும் குறைவாக இருக்கும். மேலும் செர்ரி பழங்களில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ளதால் உங்கள் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க இது உதவும்.

பீச் பழம் : சாப்பிடுவதற்கு ஜூஸியாகவும் சுவையாகவும் இருக்கும் பீச் பழத்தில் குறைவான சர்க்கரையும் அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனால் டயாபடீஸ் நோயாளிகள் இதை தாராளமாக தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ளம்ஸ் : சுவையும், பல சத்துக்களும் ஒருங்கே அமைந்த ப்ளம்ஸில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளது. இந்தப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் உணவோடு அல்லது சாலடில் பயன்படுத்தியோ சாப்பிடுவதற்கு சிறந்ததாக இருக்கும்.

க்ரேப்ஃப்ரூட் : லேசான கசப்பு சுவையோடு இருக்கும் க்ரேப்ஃப்ரூட், குறைவான சர்க்கரை அளவை கொண்டது. இந்தப் பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது.

கிவி பழம் :

குறைவான சர்க்கரை மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட கிவி பழத்தை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். கிவி பழத்தில் மற்ற பழங்களைப் போலவே அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது

ஆரஞ்சு :

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சில் குறைவான சர்க்கரை அளவே உள்ளது. மேலும் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின் சி இருப்பதால், இதை சாபிட்டதும் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதை பழமாகவோ அல்லது ஜூஸாகவே செய்து சாப்பிடலம்.

அவகோடா :

குறைவான சர்க்கரை கொண்ட அவகோடாவில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பு அதிகமுள்ளது. இதை சாலடாகவோ, சாண்ட்விச்சாகவோ அல்லது அப்படியே பழமாக கூட சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment