கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!

by Column Editor

கோவை மாவட்ட ஆசியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தி கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆட்சியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, ஆட்சியர் சமீரன் தனது கோவை ரேஸ் கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, நேற்று முன்தினம் வ.உ.சி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஆட்சியர் சமீரன், உடல்நல குறைவு காரணமாக நேற்று அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீஷ் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பு காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment