பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள்

by Column Editor

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காயவைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும்.

பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு விட்டால் பித்தம் சரியாகிவிடும்.

பனங்கிழங்கில் பாதமைப் போன்ற உயர்சத்துக்கள் உள்ளன. உடல் மெலிந்தவர்களுக்கு, சுலபமாக எடையை ஏற்றுவதற்கும் பனங்கிழங்கு சிறந்தது என்பதால், உடல் பருமனானவர்கள் அளவுடன் தான் பனையின் கிழங்கை சாப்பிட வேண்டும்.

ப‌னங்கிழங்கு உடலுக்கு குளுமையைத் தரக்கூடியது என்பதால், குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப‌னங்கிழங்கு சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை அதிகமாகலாம். எனவே, பனங்கிழங்குடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்.

Related Posts

Leave a Comment