மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகளை நீக்கும் கற்பூரவள்ளி !!

by Column Editor

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

கற்பூரவள்ளி இலை அஜீரண கோளாறுகளைத் போக்கும். சில வகையான உணவுகளை சாப்பிடுவதாலும்,நேரங்கடந்து சாப்பிடுவதாலும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி இலை சாற்றினை அருந்தினால் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து அஜீரண கோளாறுகளைத் போக்கும்.

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

கற்பூரவள்ளி இலையில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் ப்ரீ ராடிக்கல்ஸ்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து சிறுவயதில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது.

Related Posts

Leave a Comment