பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு?

by Column Editor

கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் திறப்பது குறித்து அமைச்சருடன் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பரில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பருவமழை ஓய்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்தாவது நேரடி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டிருந்தபோது, கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைய தொடங்கியது.

இதனால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்து, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பு குறித்து, பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இ்ந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை துறை அமைச்சரான அன்பில் மகேஷ் கவனத்துக்கு எடுத்து சென்று அவருடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனையின்படி, பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின்தான் இறுதி முடிவு எடுப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment