பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி..

by Column Editor

புதியவகை பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக பரிசோதித்தது.

பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வலை ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனை செய்தது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள பாலாசோர் கடற்கரையில் உள்ள ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து காலை 10.45 மணியளவில் பிரமோஸ் ஏவுகனையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பரிசோதிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

மேலும், மேம்படுத்தப்பட்ட திறன்களை வெற்றிகரமாக நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதிபடுத்தியுள்ளதாகவும், இதில் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பக் கருவிகள் வெற்றிகரமாக செயல்படுவதாகவும் டிஆர்டிஓ தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த 11 ஆம் தேதி, ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட , கடற்படையில் இணைக்கப்பட உள்ள நவீன சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment