வாய்ப்புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும் கோவைக்காய் !!

by Column Editor

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரக்கூடிய சர்க்கரையின் விகிதத்தினை கோவைக்காய் கட்டுப்படுத்துகிறது.

தினசரி குறைந்தது ஐம்பது கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.

கோவை இலையை கசாயம் செய்து குடித்து வருவதன் மூலமாக உடல் வெப்பம் சமநிலையில் இருக்கும்.

கண்கள் குளிர்ச்சி பெறும். கோவை இலை கசாயம் குடித்துவர கண் எரிச்சல் தீரும்.

கோவை இலைச்சாறு, கருஞ்சீரகம் பொடி ஐந்து கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். தொடர்ந்து பூசிவர படை குணமாகும். கோவை இலை கசாயம் குடித்து வர சொறி, சிரங்கு தீரும்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோவைக்காய் பச்சடி செய்து சாப்பிடுவது சிறந்த மருந்து. கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாய்வு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும்.

முக்கியமாக கோவக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கிறது.

Related Posts

Leave a Comment