பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

by Column Editor

பாகற்காயோ கசப்பு தான் பழகிப் போனால் சுவைப்பு தான்,என அனைவரும் அறிந்த ஒன்றுதான். காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது, பாகற்காய். இது உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு,கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன. பாகற்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும். அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது.

இது ஒரு சிறந்த விஷ முறிவாக செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.

கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நோயை முற்றிலும் குணமாக்கலாம் என கூறப்படுகிறது.

கல் அடைப்பு மற்றும் மூல நோய் உள்ளவர்கள் பாகற்காயை சாப்பிடுவதன் மூலம் அந்த நோயை குணமாக்கலாம்.

மற்ற எந்த உடல் குறைபாடு காரணமாக மாத்திரை எடுத்து வந்தாலும் அந்த மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப பாகற்காயை சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment