சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி ..

by Lifestyle Editor

தினை வகைகளில் முக்கியமானது ஃபாக்ஸ்டெயில் (Foxtail millet) எனப்படும் குதிரைவாலி. இந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக (International Year of Millets) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் குதிரைவாலி நமக்கு தரும் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஃபாக்ஸ்டெயில் தினையானது இதய ஆரோக்கியம், சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு நல்லது என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்ட் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. FSSAI குதிரைவாலி தினையின் வேறு சில நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

நரம்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

சரும ஆரோக்கியம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது.

FSSAI பரிந்துரைப்படி குதிரைவாலி தினையை தோசையாக, சீலாஸாக, பேன் கேக்ஸ் மற்றும் குக்கீஸ்களாக செய்யது சாப்பிடலாம். தவிர குதிரைவாலி கிச்சடி, குதிரைவாலி கஞ்சி, குதிரைவாலி பொங்கல் உள்ளிட்டவையும் செய்து சுவைக்கலாம்.

Related Posts

Leave a Comment