தொட்டியில் வளர்க்கக்கூடிய 10 செடிகள்!!!

by Lifestyle Editor

காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. நடுத்தரக் குடும்பத்தினர் காய்கறிப் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளும் அளவிற்கு விலைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. நாமே விளைவித்தால் தான் உண்டு என்னும் அளவிற்கு காய்கறிகளின் விலைகள் உள்ளன. மேலும் நாமே நமது சொந்தத் தோட்டத்தில் காய்கறிகள், பூக்கள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பயன்படுத்தினால், அதனால் வரும் ஆனந்தமும் பெருமையும் அளவிட முடியாதது.

ஆனால் எல்லோராலும் தோட்டம் அமைக்க முடியுமா??? அதற்கு தண்ணீர் வசதியும், தகுதியான தரமான மண்ணும், போதுமான நிலமும் இருக்க வேண்டும். ஆயினும், தோட்டம் போடுவதற்குத் தகுந்த நிலம் இல்லை என்பதற்காக தோட்டமே போட முடியாது என்று அர்த்தமல்ல. அடுக்கு மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்காகவும், தோட்டம் போட சரியான மண் வளம் இல்லாத நிலம் வைத்திருப்பவர்களுக்காகவும் உருவானவை தான் தொட்டித் தோட்டங்கள். செடிகள் வளர்ப்பதற்கு ஏற்றவாறு தொட்டிகள் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் கிடைக்கின்றன.

மலர்களுக்காக, காய்கறிகளுக்காக, மூலிகைகளுக்காக என்று தனித்தனி தொட்டிகளுடன் தோட்டம் அமைத்து வனப்பை உண்டாக்கலாம் அல்லது அனைத்துத் தாவரங்களும் கலந்திருக்கும் வண்ணம் ஒரு கலப்புத் தோட்டத்தினை அமைக்கலாம். வீட்டு மாடியில், பால்கனியில், தொட்டித் தோட்டம் அமைப்பதற்கு ஏதுவான பத்து வகைத் தாவரங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

இம்பேஷன்ஸ் (Impatiens)

இம்பேஷன்ஸ் பலவண்ணங்களில் கிடைக்கின்றன. இதை வளர்ப்பது மிக எளிது. இதனால் இச்செடி மிகப் பிரசித்தம் பெற்றது. தொட்டியில் வளர்க்கும் போது, தோட்ட மண்ணில் வளர்ப்பதை விட, மண்ணில்லாத கலவையில் (soil-less mix ) வளர்ப்பது மிக நல்லது. குறிப்பாக தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பெகோனியாஸ் (Begonias)

பொதுவாக வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் ஸ்கார்லெட் வண்ணங்களில் கிடைக்கிறது. ஆனால், இவற்றின் கவர்ச்சியான வண்ணங்கள் மற்றும் இலைகளின் காரணமாக, கலப்பின பெகோனியாக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, மார்க்கெட்டில் அதிகமாகக் கிடைக்கின்றன. வெப்ப மற்றும் மிதவெப்பப் பகுதிகளில் இவற்றை வீட்டைச் சுற்றி ஆண்டு முழுவதும், வளர்க்கலாம். குளிர் பிரதேசங்களில் இதனை வீட்டிற்குள் தான் வளர்க்க முடியும்.

சாமந்தி (Marigold)

இவை விதைத்து 45 முதல் 50 நாள்களுக்குள் பூக்கத் தொடங்கிவிடும். பனிக்காலம் முடிந்த பிறகு அதாவது, மார்ச் பின்பகுதியில் அல்லது ஏப்ரல் முன்பகுதியில், வீட்டுக்குள் இவற்றை நடலாம். அதன்பின் இவற்றை வீட்டிற்கு வெளியே வைக்கலாம். மேலும் மண்ணை ஈரப்பதத்துடன் பேண வேண்டும். அதற்காக அதிகமான ஈரம் கூடாது. இறந்து போன மலர்களை அகற்றினால் புதிய மலர்கள் அதிகமாகப் பூக்கும்.

காக்டை(Cacti)

பொதுவாக காக்டை தண்ணீர் குறைவாக உள்ள இடத்தில் தான் வளரும், ஆனால் சில காக்டை தண்ணீர் உற்றி வளர்க்கப்படும் அதில் அழகான பூக்கள் பூக்கும். மேலும் காக்டையில் நிறைய வகைகள் இருப்பதினால், மிக அழகிய தொட்டித் தோட்டம் உருவாக்கப் பயன்படுகிறது. இதை எளிதில் வளர்க்க முடியும். தோட்டம் வைத்துப் பராமரிக்கும் திறன் இல்லாதவர்களுக்கும் இதனை வளர்ப்பது மிக எளிது.

லெட்யூஸ் (Lettuce)

வீட்டுத் தொட்டிகளில் லெட்யூஸ் கீரையை வளர்த்து வருகிறீர்கள் என்றால் வீட்டில் எப்போதுமே கீரைக்குப் பஞ்சமே இருக்காது. இவை வளர்வதற்கு, 6 முதல் 8 அங்குல ஆழத்திற்கு மண் இருந்தால் போதும். மேலும், குளிர்ந்த காலநிலைதான் இதற்கு ஏற்றது.

கேரட்

சாலட், சூப், ரசங்கள் மற்றும் கேக்குகள் போன்ற பலவகை உணவுகளில், கேரட் பயன்படுத்தப்படுகிறது. தொட்டித் தோட்டத்திற்கு இவை மிகவும் ஏற்றவை. ஏனென்றால், இவை வளர்வதற்கு 10 அங்குலத்துக்கு 10 அங்குலம் என்ற பரப்பளவுள்ள இடம் இருந்தால் போதும்.

ஜலப்பினோ மிளகுகள் (Jalapeno Peppers)

2 முதல் 3.5 அங்குலம் வரை நீளமுள்ள மிளகு வகைத் தாவரங்கள் இவை. பச்சையாகவே உண்ணப்படுபவை. எப்போதாவது நல்ல சிவப்பு நிறம் அடையும் வரை பழுக்க விடப்படும். இந்த வகை மிளகு வகைக்கும், 16 அங்குல ஆழத்திற்கு மணல் தேவைப்படும்.

தக்காளி

குட்டை வகைத் தக்காளிகள் 12 அங்குல ஆழமுள்ள மண்ணில் நன்றாக வளரும். சாதாரண வகைத் தக்காளிகளுக்கு, 24 அங்குல ஆழத்துக்கு மண் தேவைப்படும்.

ரோஸ்மேரி (Rosemary)

மற்ற தாவரங்களிலிருந்து இவற்றைத் தள்ளியே தனித் தொட்டிகளில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவற்றிற்கு ஒவ்வொரு முறை தண்ணீர் ஊற்றிய பிறகும், நன்றாக தண்ணீர் வற்றும் வரை காத்திருந்து பிறகு தான் தண்ணீர் மீண்டும் ஊற்ற வேண்டும். குளிர்காலங்களில், சற்று நேரம் வெயிலில் வைத்திருந்து பின்பு வீட்டுக்குள் எடுத்துச் செல்லலாம்.

துளசி

துளசிச் செடியை, நிறைய தண்ணீர் ஊற்றி தண்டுகளும் இலைகளும் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருப்பதாக வைத்திருக்க வேண்டும். மேலும் பூஞ்சை வந்து அழுகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். குறிப்பாக இதனை நிறைய காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment