ஒரே நாளில் மோதும் குக் வித் கோமாளி பிரபலங்கள்.. எந்த எந்த படங்கள் தெரியுமா?

by Column Editor
0 comment

குக் வித் கோமாளி மூலம் மேலும் பிரபலமான பவித்ரா லட்சுமி நடித்துள்ள நாய் சேகர் மற்றும் அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் இரண்டு படங்களும் ஒரே நாளில் திரை காண உள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வரிசைகட்டும். அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, அஜித்தின் வலிமை, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் களமிறங்க திட்டமிட்டிருந்தன. இப்படங்களுக்கான புரமோஷன் பணிகளும் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதில் இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால், போதிய வசூல் ஈட்ட முடியாது என்பதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட மூன்று படங்களும் தள்ளிவைக்கப்பட்டன. இப்படங்கள் தள்ளிப்போனது சிறு பட்ஜெட் படங்களுக்கு பலமாக அமைந்தது. இதனால் பொங்கல் ரேஸில் 7 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸாக உள்ளன.

அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, வித்தார்த் நடித்துள்ள ‘கார்பன்’, சதீஷின் ‘நாய் சேகர்’, அஸ்வினின் அறிமுக படமான ‘என்ன சொல்ல போகிறாய்’, லட்சுமி மேனனின் ‘ஏஜிபி’, ராதிகா நடித்துள்ள ‘மருத’ மற்றும் விக்னேஷ் நடித்துள்ள ‘பாசக்கார பையா’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இதில் குக் வித் கோமாளி 2 மூலம் பிரபலமான அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ மற்றும் பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ள சதீஷின் ‘நாய் சேகர்’ இரு படங்களும் ஜனவரி 13 அன்று ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment