ஒரே நாளில் 465 பேரை சாய்த்த ஒமைக்ரான்… தமிழ்நாட்டில் எத்தனை பேர் தெரியுமா?

by Column Editor

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையில் பரவல் வேகமெடுக்கிறது. முதல் இரண்டு அலைகளின் ஆரம்பத்தில் இருந்த நிலைமையை விட இப்போதைய நிலைமை அதிதீவிரமாக இருக்கிறது. அதாவது அந்த அலைகளின் தொடக்கத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்றாம் அலையில் 21 சதவீதம் அதிகமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை பதிவாகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்படைகிறது. கடந்த 3ஆம் தேதி 37 ஆயிரமாக இருந்த பாதிப்பு, நேற்று முன்தினம் 58 ஆயிரமாக மாறியது. நேற்றோ 90,928 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரானும் டெல்டாவும் ஒருசேர தாக்குவதால் தான் இந்த திடீர் உயர்வுக்கு காரணம் என மத்திய சுகாதார துறை சொல்கிறது. தமிழ்நாட்டில் கூட எம்ஐடி கல்லூரி மாணவர்கள் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்துள்ளது. இதுவே ஒமைக்ரான் பரவும் வேகத்திற்கு சாட்சி. அந்த வகையில் நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு 2,630 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி உண்டாகியுள்ளது. ஆம் டிசம்பர் 31ஆம் தேதி ராஜஸ்தானில் 73 வயது முதியவர் ஒமைக்ரானால் உயிரிழந்தார். இதனை நேற்று தான் சுகாதார துறை அறிவித்தது. அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 797 பேர், டெல்லியில் 465 பேர், ராஜஸ்தானில் 236 பேர், கேரளத்தில் 234 பேர், கர்நாடகாவில் 226 பேர், குஜராத்தில் 204 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமைக்ரான் இருந்தது கண்டறியப்பட்டது. மற்ற மாநிலங்களில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. 26 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது.

Related Posts

Leave a Comment