சக்தா எக்ஸ்பிரஸ்… பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மா!

by Column Editor

இறுதியாக, அனுஷ்கா சர்மா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மா கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாக இருக்கும் ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் சிறிய டீசரும் கூட வெளியாகியுள்ளது. இந்த படம் தனக்கு ஒரு சிறப்பான படம் என்று ஒரு அனுஷ்கா தெரிவித்துள்ளார். ஏனெனில் இது அடிப்படையில் மிகப்பெரிய தியாகத்தின் கதை. இது பெண்கள் கிரிக்கெட் உலகத்தைப் பற்றிய முதல் திரைப்படமாகும், மேலும் ஜூலன் ஒரு கிரிக்கெட் வீரராகி தனது நாட்டைப் பெருமைப்படுத்த முடிவு செய்த காலத்தைச் சுற்றியே இந்தப் படம் அமைந்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதைத் தொழிலாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற ஒரே மாதிரியான கருத்தை மாற்ற அவர் பாடுபட்டார், இதனால் அடுத்த தலைமுறை பெண்கள் சிறந்த விளையாட்டு மைதானத்தைப் பெறுவார்கள் என்று ஜூலன் போராடினார்” என்று அனுஸ்கா பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் அனுஷ்கா குழந்தை பெற்ற பிறகு நடிக்கும் முதல் படமாகும். இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment