சமூகத்தின் முக்கிய பிரச்சனையை கைலெடுக்கும் எச்.வினோத்.. ‘அஜித் 61’ குறித்து முக்கிய அப்டேட்

by Column Editor

சமூகத்தில் முக்கிய பிரச்சனை ஒன்றை வைத்து ‘அஜித் 61’ படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் மாஸ் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வலிமை படத்தின் பணிகள் முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளதை அடுத்து அஜித்தின் அடுத்த பணிகள் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக அஜித்தின் 61வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்கவுள்ளார். அதோடு இப்படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளார். முதல்கட்ட பணிகள் நடைபெற்று இப்படத்தின் கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இளைஞர் மற்றும் குடும்பத்தில் உள்ள உலகளாவிய சமூக அவலத்தை எடுத்துரைக்கும் வகையிலான கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. அதேபோன்று குறைவான ஆக்ஷன் காட்சிகளுடன், சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டு வசனங்கள் இடம்பெற உள்ளது. அதோடு இந்த படத்தில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட இளைஞனாக அஜித் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்து வந்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment