தெற்கு லண்டனில் தீ விபத்து: நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!

by Column Editor

தெற்கு லண்டனின் சுட்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) 18:55 மணிக்கு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழகை;கப்பட்டுள்ளனர்.

அவசர மருத்துவ ஊர்தி குழுவினர் வந்து இரண்டு தனி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீவிபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் இதுகுறித்து மெட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இறப்புகள் அனைவரையும் ஆழ்ந்த சோகத்துடன் உணர்ச்சியடையச் செய்துள்ளது என லண்டன் தீயணைப்புப் படை ஆணையர் ஆண்டி ரோ தெரிவித்துள்ளார்.

அறுபது தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment