417
பிக் பாஸ் 5ல் இருந்து நேற்று இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் வெளியே போவார் என வீட்டில் இருந்தவர்களே யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. கன்பெக்ஷன் ரூமில் நடத்தாமல் அனைவர் முன்பும் ஒரு ஜாடி வைக்கப்பட்டு அதில் பெயர்களை எழுதி போடவேண்டும் என சொல்லப்பட்டது.
ஆனால் போட்டியாளர்களே யாரை நாமினேட் செய்கிறீர்கள் என சொல்லி இருக்கின்றனர். மேலும் அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அவர்களுக்கு ரேங்க் கொடுக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதில் ஜெயிப்பவர்களுக்கு நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் யாரெல்லாம் நாமினேஷனில் இருந்து தப்பிக்கிறார்கள் என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.