விஜய்யுடன் ஹாட்ரிக் கூட்டணியா?… ‘தளபதி 66’ குறித்து சுட சுட அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

by Column Editor

தளபதி 66 (Thalapathy 66) படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் (vijay). இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்க அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. அந்த வகையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார். அதன்படி தளபதி 66 படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றும், அவ்வாறு பரவும் தகவல் வெறும் வதந்தி என்றும் கூறி உள்ளார். இதன்மூலம் தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Related Posts

Leave a Comment