மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கனவுத் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

by Column Editor

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கனவுத் திரைப்படமான காந்தடகுடி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். அவருடைய மறைவு நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியத் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். புனீத் மறைந்து பல நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் மக்கள் மனதில் நீங்கா துயரம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் புனீத் ராஜ்குமார் இறப்பதற்கு முன்னாள் நடித்த காந்தடகுடி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் ட்ராவல் அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ளது. இது புனீத் ராஜ்குமாரின் கனவுத் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் நடித்த காந்தடகுடி என்ற தலைப்பே இவரது படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அமோகவர்ஷா இயக்கியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் மனம் மயக்கம் இயற்கை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. புனீத் ராஜ்குமாரின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment