தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மாஸ் காட்டியதா? விமர்சனம்

by Lifestyle Editor

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நடிகர்களின் 3 வருட உழைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருவதை தெரிந்து கொள்வோம் வாங்க…

ரசிகை ஒருவர் இப்படம் குறித்து கூறியுள்ள விமர்சனத்தில், தனுஷ்கேப்டன்மில்லராக தீ போல் நடித்துள்ளார் என எமோஜி மூலம் கூறியுள்ளார். ஓ மை காட்… என்ன ஒரு பெர்ஃபார்மர் மை மேன். கூஸ்பம்ப்ஸ் ஓவர்லோடட். பேக் கிரவுண்ட் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஸ்கோர் செய்கிறார் என கூறி ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் தன்னுடைய ட்விட்டர் விமர்சனத்தில், “இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த அதிரடித் திரைப்படம் இது என்றும் அற்புதமான பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார். மிகவும் அருமையாக உள்ளது, ஒவ்வொரு பிரேமிலும் காட்சிகள் வெடித்துச் சிதறுகின்றன இந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களிலிருந்து விடுபடுகிறது எனகூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment