பொங்கல் சிறப்பு பேருந்து – 1.25 லட்சம் பேர் முன்பதிவு

by Lifestyle Editor

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது 3 நாட்கள் கொண்டாடப்படும். இதன் காரணமாக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 8,478 சிறப்பு பேருந்துகள் என அடுத்த 3 நாட்களுக்கு 13,184 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 901 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment