வேலுர் அரசு மருத்துவமனையிலும் ஓமைக்ரான் சிறப்பு வார்டு ஒதுக்கீடு…

by Column Editor

வேலூர் அரசு மருத்துவமையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, மருத்துவர்களும் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உருமாறிய புதியவகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 2 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஓமைக்ரான் பரவலைக் கடுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துவது, தேவையான மருத்துவ வசதிகளை கட்டமைப்பது என சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, ஓமைக்ரான் பரவலைக் கருத்தில்கொண்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 150 சிறப்பு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேபோல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மற்றும் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டன. அந்தவகையில், தற்போது வேலூரில் ஓமைக்ரான் சிறப்பு வார்டு அமைந்துள்ளது.

அதில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்காக நான்கு படுக்கைகள் மற்றும் தனிமைபடுத்துதல் வசதி, வெண்டிலேட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த வார்டுகளில் பணிபுரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment