‘மாநாடு’ படத்திற்குப் பிறகு சம்பளத்தை டபுள் ஆக்கிய எஸ்ஜே சூர்யா!? அதிர்ச்சியான தயாரிப்பாளர்!

by Column Editor

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

படத்தில் சிம்புவுக்கு இணையாக எஸ்ஜே சூர்யாவுக்கும் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெறித்தனம் செய்திருந்தார். சில காட்சிகளில் சிம்புவையே மிஞ்சும் அளவுக்கு அவர் நடிப்பு இருந்தது. அவர் வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரம் விண்ணை பிளந்தது. மேலும் எஸ்ஜே சூர்யாவுக்கு இரண்டு முறை மாஸ் இன்ட்ரோ காட்சி இருந்தது.

இந்நிலையில் எஸ்ஜே சூர்யா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடிக்க ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநாடு படத்தில் தனக்கு கிடைத்த அமோக வரவேற்பினால் எஸ்ஜே சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக 3 கோடி ரூபாய் வரை வாங்கும் அவர் இந்தப் படத்திற்கு 6 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது. சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கியுள்ளதால் படக்குழு வேறொரு நடிகரை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment