காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக கலகலப்பாக டப்பிங் பேசிய பிரபு!

by Column Editor

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகர் பிரபு உடன் டப்பிங்கில் பணிபுரிந்த அனுபவங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் வழக்கமான காமெடி ரொமான்ஸ் ஜேர்னரில் தான் இந்தப் படமும் உருவாகி வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார். விக்னேஷ் சிவனும் நயனும் டப்பிங் ஸ்டுடியோவில் காதல் பொங்க டப்பிங் செய்த புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலாகின.

தற்போது நடிகர் பிரபு டப்பிங்கைத் துவங்கியுள்ளார். அதைப் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் “அதிகாலையில், இனிமையான மற்றும் அற்புதமான மனிதர் பிரபு சாருடன் பணிபுரிந்து, அப்டியே அவரது வீட்டு காபியை ருசித்தேன்… ஆஹா என்ன ஒரு ஆனந்தம். இந்த படத்தில் நீங்கள் ஒரு அங்கமாக மிகவும் நேர்மறையான மற்றும் தெய்வீகமான நபராக இருப்பதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

பிரபு வழங்கிய காபியை மிகவும் ருசித்து பருகிய விக்னேஷ் சிவன் ஒரு குடம் முழுக்க காபி கொடுத்தாலும் குடிப்பேன் என்கிறார். பின்னர் தனியாக டப்பிங் வைப்பதற்கு பதிலாக ஹீரோயின்களுடன் வைத்தால் நல்லாருக்கும் என்கிறார். இப்படியாக கலகலப்பாக டப்பிங் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment