அமீர்கானுடன் திருமணமா? அதிர்ச்சியில் நடிகை

by Column Editor

பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் திருமணம் நடக்க போவதாக வந்த தகவலால் பிரபல நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாலிவுட் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக் , அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது. தற்போது மூன்றாவதாக பாத்திமா சனா ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்திதான் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment