அஜித்தின் வலிமை பட ரிலீஸ் தேதி குறித்து கசிந்த தகவல்- தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை திரையில் ரிலீஸா?

by Column Editor

அஜித்தின் வலிமை படம் பல வருடங்களாக உருவாகி வருகிறது.

பிங்க் என்ற படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரித்தார். அப்படத்தின் மூலம் அஜித்தை இயக்கும் வாய்ப்பு வினோத்திற்கு கிடைத்தது.

அப்பட ரிலீஸ் கையோடு அதே குழு புதிய படத்தை தொடங்கினர், பட பூஜையின் போதே படத்திற்கு வலிமை என பெயர் வைத்திருப்பதாக அறிவித்தனர்.

அதுவே ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது, எனவே ரசிகர்கள் அடுத்தடுத்து நிறைய அப்டேட்டுகள் வரும் என காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா நோய் தொற்று படக்குழுவின் வேகத்தை அப்படியே குறைத்துவிட்டது.

கொரோனா, நடிகர்கள் சிலர் மீண்டும் நடிக்க வர மறுத்தது என நிறைய பிரச்சனைகள், ஒருவழியாக இப்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

ரசிகர்களோ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து யோசித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தான் அஜித்தின் வலிமை பட ரிலீஸ் அடுத்த வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது என கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 700ல் இருந்து 800 திரையில் வலிமை பட திரையிடப்படலாம் என்கின்றனர்.

Related Posts

Leave a Comment