வீர மரணம் அடைந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு , ரூ.1 கோடி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

by Column Editor

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன், ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு சாலையில் 3 இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால் அவர்கள்.இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களை விரட்டி சென்றுள்ளார்.

இதனைத் அறிந்து கொண்ட மற்ற 2 இருசக்கர வாகனங்களில் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது நண்பர்களை விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் பூமிநாதன் முடியாது என கூற அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூமிநாதனை வெட்டினர்.

படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேய துடிதுடித்து உயிரிழந்தார். ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி வழஙகப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் , இன்று தலமை செயல்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ,உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

Related Posts

Leave a Comment