கமலுக்கு ஜோடி முன்னணி ஹீரோயினா ?… ‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்

by Column Editor

விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கமல் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

த்ரில்லர் படமாக உருவாகி இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவாணி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவுபெற்றது. இதையடுத்து நான்காம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய தகவலின்படி கமலுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமலுடன் அந்த நடிகை நடிக்கும் காட்சிகள் மிக முக்கியமானது என்று கூறப்படுகிறது. அதோடு இந்த முன்னணி நடிகை யார் என்பது குறித்து மிகவும் ரகசியமாக படக்குழு வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment