மனைவி, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்ராந்த்

by Column Editor

நடிகர் விக்ராந்த், ஆரம்பத்தில் புதுமுக நடிகராக சினிமாவில் நடித்து வந்தார். பின் அவர் தளபதி விஜய்யின் உறவினர் என்ற அடையாளத்தோடு மக்களால் பார்க்கப்பட்டார்.

ஆனால் அவர் அதிகமாக தளபதி பெயரை பயன்படுத்தியதே கிடையாது, தனக்கு என்ன வருமோ அதை நோக்கி பயணம் செய்து வந்தார். சின்ன சின்னதாக படங்கள் அவர் நடித்து வந்தாலும் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.

கொரோனா நோய் தொற்று பிரச்சனைகளுக்கு பிறகு ஜீ தமிழில் சர்வைவர் என்ற ஷோ தொடங்கப்பட்டது, அதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார் விக்ராந்த்.

நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் அனைவரும் இந்தியா திரும்பியுள்ளனர், எலிமினேஷன் ஆனவர்களின் விவரம் தொலைக்காட்சியில் காட்டிய பிறகு பிரபலங்கள் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

தற்போது நடிகர் விக்ராந்த் தனது பிறந்தநாளை மனைவி மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment