நிரூப்பிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த வருண் – “நீ அசிங்கமா விளையாடுன்னா.. நானும் அப்படிதான் விளையாடுவேன்”

by Column Editor

புதிய டாஸ்க்கால் வருணும், நிரூப்பும் காரசாரமாக சண்டை போட்டுக்கொள்ளும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய டாஸ்க்குகளால் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரளயமே வெடித்து வருகிறது. பெண்கள் அணியினர் மட்டுமே இதுவரை சண்டை போட்டு வந்த நிலை மாறி, ஆண் போட்டியாளர்களும், சமீபத்திய எபிசோடுகளில் சண்டை போட்டு வருகின்றனர். நேற்றைய டாஸ்க்கில் கூட அபினய்யும், நிரூப்பும் சண்டை போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இன்றைய தினத்திற்கான புதிய டாஸ்க்கிற்கான அறிவிப்பு முதல் ப்ரோமோவில் வெளியானது. ‘நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் பொம்மை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கின்படி கார்டன் ஏரியாவில் ஒரு இடத்தில் வரிசையாக பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த பொம்மையில் போட்டியாளர் ஒவ்வொருவரின் பெயரும் புகைப்படத்துடன் இருக்கும். அதில் யாருடைய பொம்மையை கடைசியாக வரும் போட்டியாளர் கொண்டு வருகிறார்களோ, அவர்கள் ஸடாஸ்க்கிலிருந்து வெளியேற்றப்படுவர்.
இந்த டாஸ்க்கின்படி முதல் போட்டியாளராக பிரியங்கா வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் பொம்மை எடுப்பது தொடர்பாக வருண் மற்றும் நிரூப் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. நீ நியாயமாக விளையாடுவதில்லை என்று கூறும் வருண், தொடர்ந்து நிரூப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதையடுத்து நான் ஜாலியாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்படி அசிங்கமாக ஆடினா நானும் அசிங்கமா தான் ஆடுவேன்

Related Posts

Leave a Comment