காதலன் டார்ச்சரால் ஒரு பெண் போலீசுக்கு நேர்ந்த கதி

by Lifestyle Editor

காதலனின் தொந்தரவு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாராக இருந்து வந்தவர் தீபாலி கதம். இவரும், நாலாச்சோப்ரா துலின்ஞ் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் வால்மிக் அகிரே என்பவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்து உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் திடீரென்று ஏற்பட்ட சண்டையால் அந்த காதல் பாதியிலேயே முறிந்து போனது .அதன் பிறகு அந்த பெண் போலீசுக்கு வேறொரு மாப்பிளையை பார்த்து அவரின் குடுமபத்தார் நிச்சயம் செய்தனர்

அதனால் அந்த தீபாலி கதமிற்கு மயூர் காம்ளே என்ற வாலிபருடன் வருகிற 16-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இதற்கிடையே அந்த பெண் போலீசின் முன்னாள் காதலன் இந்த கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு ,அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையிடம் சென்று தங்களின் காதல் விவகாரத்தினை கூறிவிட்டார் .இதனால் கடுப்பான மாப்பிளை அந்த பெண் போலீஸுடனான கல்யாணத்தை நிறுத்தி விட்டார் .இதனால் மனம் நொந்து போன அந்த பெண் போலிஸ் தீபாளி தன் முன்னாள் காதலன் தொல்லை தாங்க முடியாததால் இறக்க விரும்புவதாக ஒரு தற்கொலை குறிப்பை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் பொலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

Related Posts

Leave a Comment