வின்னர் யார் தெரியுமா? பிக் பாஸ் சீசன் 5

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக துவங்கப்பட்டு தற்போது ஐந்தாவது வாரம் நடைபெற்று வருகிறது.

நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் அபினய் எலிமினேட் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிக் பாஸ் சீசன் 5 வின்னர் லிஸ்ட்டே இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வரை எலிமினேஷன் எபிசோடுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமின்றி இணையத்தில் பிக் பாஸ் 5 சீசனில் வெளியேறுபவர்கள் பட்டியலும் பிக் பாஸ் சீசன் இன் வெற்றியாளர் யார் என்பதும் வெளியிடப்பட்டுள்ளது.

எந்த வாரத்தில் எந்தெந்த போட்டியாளர் வெளியேறப் போகிறார் என்பதும் அதில் உள்ளது ‌ இந்த சீசனின் வெற்றியாளராக ராஜூவும், ரன்னர்அப் ஆகா பிரியங்காவும் அந்தப் பட்டியலில் உள்ளனர். அதேபோல இந்த வாரத்தில் அபினய் வெளியேற்றப்படுவார் என்பதும் அதில் உள்ளது.

அடுத்ததாக இசைவாணி வெளியேற்றப்படுவார் என்று அந்த பட்டியல் குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி எக்கச்சக்கமான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் இந்த பட்டியல் ரசிகர்களில் யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பட்டியல் உண்மையா பொய்யா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். இதனிடையே இந்த வாரம் தீபாவளி பண்டிகை இருப்பதால், கடந்த ஆண்டு போலவே பண்டிகையை முன்னிட்டு எந்த போட்டியாளரும் எலிமினேஷன் செய்யப்பட மாட்டார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

Related Posts

Leave a Comment