சந்திரன் ஸ்லோகம்

by Lifestyle Editor

‘பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’

இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.

ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.

Related Posts

Leave a Comment