உங்கள் சரும அழகை பாதுகாப்பாக வைத்து கொள்ள உப்பு கொஞ்சம் பயன்படுத்தி பாருங்கள்!

by Lifestyle Editor

பொதுவாகவே உப்பை நாம் வெறும் சமையல் பொருளாக மாத்திரம் தான் பார்த்திருப்போம் ஆனால் உப்பு மனித உடலுக்கு அத்தனை நன்மைகளை அள்ளிக்கொடுக்கிறது என்பது எத்தனை் பேருக்குத் தெரியும்.

உப்பு

ஆதிகாலத்து மனிதன் நெருப்பை கண்டறிந்து சமைத்து உண்ணத் தொடங்கிய சில காலங்களிலேயே உணவு தயாரிப்பில் உப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான்.

உப்பில் கடல் உப்பு, பாறை உப்பு போன்ற பல உப்பு என ஏகப்பட்ட உப்பு வகைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது மனிதர்கள் பயன்படுத்துகின்றது பெரும்பாலும் பயன்படுத்துவது கடலில் இருந்து பெறப்பட்டு, தொழில்நுட்ப ரீதியில் அயோடின் கலந்து உருவாக்கப்படும் உப்பு ஆகும்.

உப்பு உணவில் சுவையை கூட்டுவதை தாண்டி, உணவுப் பண்டங்களை கெடாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.மேலும், உப்பானது மனிதர்களின் உடலில் இதயத் துடிப்பு, தசைகளின் இயக்கம், செரிமானத் திறன் ஆகியவற்றின் சீரான இயக்கத்திற்கு மிகவும் துணைபுரிகிறது.

அதுமட்டுமில்லாமல் நீர்சத்து இழப்பை தடுப்பதற்கும், இரத்த அழுத்த குறைப்பாடுகளைத் தடுப்பதற்கும் நீரிழிவு ஏற்படாமல் தடுப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

சரும அழகிற்கு உப்பு

உப்பு உணவிற்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல சருமத்திற்கும் முக்கியமானதாகும். உப்பு சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமப்பொலிவை அதிகரித்து காட்டும்.

அதற்கு ½ கப் ஆலிவ் ஆயில், ¼ கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன், முகம், கை, கால் மற்றும் உடலில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.

பேஸ் மாஸ்க் உப்பு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள உதவும்.

அதற்கு 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவவும். தினமும் உப்பில் குளிப்பதால் உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் வலி மிகுந்த தசை மற்றும் மூட்டு பகுதிகளுக்கு அவ்வளவு மிதமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment