ஜேர்மனியிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் பிரித்தானியா – Fiona Schenk!

by Lifestyle Editor

புகலிடக் கோரிக்கையாளர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என ஜேர்மனியிடமிருந்து பிரித்தானியா கற்றுக்கொள்ள வேண்டும் என ஜேர்மனியில், புதிதாக வந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பியோனா (Fiona Schenk) தெரிவித்துள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களை ஜேர்மனியும் பிரித்தானியாவும் நடத்தும் விதத்தில் உள்ள வித்தியாசங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, பொருளாதார புலம்பெயர்ந்தோராக இருந்தாலும் சரி, அவர்கள் மரியாதையுடனும் அக்கறையுடனும் ஜேர்மனியல் நடத்தப்படுவதாக Fiona Schenk தெரிவித்துள்ளார்.

அடக்குமுறை, போர், பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து தப்பி ஓடி வந்த மக்களுக்கு ஜேர்மன் அரசு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்கள் ஜேர்மனியின் குடிமக்களாக மாறும்போது தங்களுக்கு அனைத்தையும் அளித்த நாட்டுக்கு பதிலுக்கு தாம் எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் தோன்றுவதாக Fiona Schenk தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரித்தானியா புகலிடக்கோரிக்கையாளர்களை எப்படி நடத்துகிறது என்பது உலகுக்கே நன்றாகத் தெரியும் என தெரிவித்துள்ள Fiona Schenk, கடைசி நடவடிக்கையாக, புகலிடக்கோரிக்கையாளர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் முயற்சியில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment