கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

by Editor News

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்த நிலையில், ஒரு சில நாடுகள் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தன.

இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் எதிராக நஷ்டஈடு கோரி சுமார் 51 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்குகள் மீதான விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த ஆவணத்தில், “தன் நிறுவனம் உருவாக்கிய கொவிஷீல்ட் கொவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும்“ என ஒப்புக்கொண்டதாக த டெலிகிராப் (the telegraph) ஊடகம் தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு மற்றும் இரத்தில் காணப்படும் குருதிச் சிறு தட்டுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment