விஷாலின் ரத்னம் படத்தின் மூன்று நாள் வசூல் இவ்வளவுதானா?

by Lifestyle Editor

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் கடந்த வாரம் முதலாகவே படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்று ரத்னம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பல திரையரங்குகளில் ரத்னம் படத்திற்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது.

கில்லி ரீ ரிலீஸுக்கு அதிக திரைகள் ஒதுக்கி ரத்னத்தை ஓரம் கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அதை தூக்கிவிட்டு ரத்னம் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரத்னம் படம் கடந்த வார இறுதியில் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருந்தாலே பெரிய விஷயம் என சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்களிலும் பெரிய முன்னேற்றம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை 3 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் 5 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என்பது பரிதாபத்துக்குரிய செய்தியாக உள்ளது.

Related Posts

Leave a Comment