பசும்பால் Vs எருமை பால்.. இரண்டில் எது ஆரோக்கியம் நிறைந்தது..?

by Lifestyle Editor

பால் என்பது நமது அன்றாட உணவில் ஒரு பிரதான இடத்தை கொண்டுள்ளது. பசு மாட்டு பால், எருமை மாட்டு பால், ஆட்டுப்பால் போன்ற விலங்கும் மூலங்களில் இருந்து நமக்கு பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், சோயா மற்றும் பாதாம் பால் போன்ற தாவர மூலங்களிலிருந்தும் நமக்கு பால் கிடைக்கிறது.

எனினும் ஒவ்வொரு வகையான பாலிலும் பல்வேறு ஊட்டச்சத்து மதிப்புகள் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான பால் ஏற்றதாக அமைகிறது. அந்த வகையில் பசு மாட்டு பால் மற்றும் எருமை பால் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அதன் ஊட்டச்சத்து, சுவை மற்றும் ஆரோக்கிய நலன்கள் வேறுபடுகின்றன.

இந்த இரண்டு பாலுமே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அவை தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. இப்பொழுது பசு மாட்டு பால் சிறந்ததா அல்லது எருமை மாட்டு பால் சிறந்ததா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இது குறித்து ஒரு சில தகவல்களை பார்க்கலாம்.

எருமை மாட்டு பாலில் அதிக புரத அளவு உள்ளது:

பசு மாட்டு பால் 3.2 சதவீத புரதத்துடன் அதிக தரம் வாய்ந்த புரதத்தின் நல்ல ஒரு மூலமாக அமைகிறது. பசுமாட்டு பால் உள்ள புரதம் முக்கியமாக கேசின் மற்றும் வே போன்ற புரதங்களால் ஆனது. இது எளிதில் செரிமானமாக கூடியது மற்றும் அத்தியாவசிய அமின அமிலங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் பசு மாட்டு பாலை விட எருமை மாட்டு பாலில் அதிக புரதம் உள்ளது. சராசரியாக 4.5% புரத அளவு எருமை மாட்டு பாலில் காணப்படுகிறது. புரத உட்கொள்ளலை அதிகரிக்க நினைக்கும் நபர்கள் எருமை மாட்டு பாலை தேர்வு செய்யலாம்.

பசும்பாலில் குறைந்த கொழுப்பு உள்ளது:

பசும்பால் பொதுவாக எருமை மாட்டு பாலுடன் ஒப்பிடும்பொழுது சராசரியாக 3.6 சதவீத கொழும்பு அளைவைக் கொண்டுள்ளது. பசும்பாலில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் முதன்மையாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் குறைந்த அளவிலும் உள்ளது. பாலில் அதிக கொழுப்பு அளவு காணப்படுகிறது. இதில் சராசரியாக 7 முதல் 8 சதவீத கொழுப்பு அடங்கியுள்ளது. எருமை மாட்டு பாலில் அதிக அளவு சாச்சுரேட்டட் கொழுப்புகள் காணப்படுகிறது.

இரண்டுமே கால்சியத்தின் சிறந்த மூலமாக அமைகின்றன… பசும்பால் மற்றும் எருமை பால் ஆகிய இரண்டுமே கால்சியத்தின் அற்புதமான மூலமாக திகழ்கிறது. நமது எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியம் போன்றவற்றிற்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியம். எனினும் எருமை மாட்டு பாலுடன் ஒப்பிடும்பொழுது பசும்பாலில் சற்று அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.

எருமை மாட்டுப்பால் கிரீமியாகவும் பசும்பால் சற்று இனிப்பு சுவை கொண்டதாகவும் உள்ளது… பசும்பால் லேசான இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இதனால் இது பொதுவாக சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் சார்ந்த ப்ராடக்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் எருமை மாட்டு பால் அதிக பாலாடைகளுடன் கிரீமியாக இருக்கிறது. இதில் உள்ள அதிக கொழுப்பு எருமை மாட்டு பாலுக்கு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. இதற்காகவே பலர் எருமை மாட்டு பாலை விரும்பி பருகுவார்கள்.

ஒரு சிலருக்கு எருமை மாட்டு பாலை செரிமானம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்… பொதுவாக பசும்பால் பெரும்பாலானவர்களால் செரிமானம் செய்யக் கூடியதாக அமைகிறது. அதிலும் இது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அல்லது பால் சார்ந்த பொருட்களுக்கு உணர்திறன் கொண்ட நபர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது. பசும்பாலில் உள்ள குறைந்த அளவு கொழுப்பு காரணமாக இது எளிதில் ஜீரணமாகிறது.

ஒரு சிலருக்கு எருமை மாட்டு பாலை செரிமானம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்… பொதுவாக பசும்பால் பெரும்பாலானவர்களால் செரிமானம் செய்யக் கூடியதாக அமைகிறது. அதிலும் இது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அல்லது பால் சார்ந்த பொருட்களுக்கு உணர்திறன் கொண்ட நபர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது. பசும்பாலில் உள்ள குறைந்த அளவு கொழுப்பு காரணமாக இது எளிதில் ஜீரணமாகிறது.

இரண்டு பாலில் எதை தேர்வு செய்ய வேண்டும்? பசு மாட்டு பால் மற்றும் எருமை மாட்டு பால் ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு தேர்வை நீங்கள் செய்யும் பொழுது அது தனிப்பட்ட நபரின் விருப்பங்கள், ஊட்டச்சத்து தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் அமையும். பசு மாட்டு பால் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் பருகப்படுகிறது.

எருமை மாட்டு பாலை விட இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு. மேலும் பசும்பாலில் அதிக அளவு வைட்டமின்கள் , கால்சியம், வைட்டமின் D போன்றவை இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமைகிறது. கூடுதலாக பசும்பால் எளிதில் ஜீரணமாக கூடியது. அதே நேரத்தில் எருமை மாட்டு பால் அதிக கொழுப்பு கொண்டுள்ள காரணத்தால் கிரீமியாக இருக்கிறது.

இதனால் இது சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் சார்ந்த ப்ராடக்டுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் A மற்றும் E உள்ளது. எனினும் கொழுப்பு உட்கொள்ளலில் கவனம் செலுத்தி வரும் நபர்கள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு எருமை மாட்டு பால் ஏற்றது அல்ல.

Related Posts

Leave a Comment