சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா..!

by Lifestyle Editor

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாம்.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின் பட்ஜெட் பிரச்சனை, கொரோனா லாக் டவுன் என நிறைய பிரச்சனைகள் சந்தித்தது.

தற்போது ரிலீஸிற்கு தயாராகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் அயலான் படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும், படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

Related Posts

Leave a Comment