சரும கரும்புள்ளிகளை நீக்க எளிய வழிமுறைகள்!

by Lifestyle Editor

பொதுவாக கோடை காலம் வந்தாலே சரும பிரச்சனைகளும் உண்டாகி பெறும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. ஆனால், இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சர்மா பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.

எனவே, கோடைகால சரும பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சை சாறுடன், ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியில் நனைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி பிறகு 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து சருமம் அழகாக காட்சியளிக்கும்.

முகத்தில் வெண்ணெய் தடவி, வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடித்து முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கங்கள் ஏற்படாது. மேலும், கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

பப்பாளி பழத்தின் தோல் மற்றும் விதையை நீக்கி நன்றாக பிசைந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும், முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளும் வெளியேறி முகம் அழகாக மாறும்.

அதேபோல் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஜாதிக்காயை அரைத்து, நன்றாக குழைத்து தொடர்ந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மறையும். ‌

Related Posts

Leave a Comment