முருங்கைக்கீரை சூப்..

by Lifestyle Editor

முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், சீரகம், மல்லி விதைகள், இஞ்சி, பூண்டு, பாசி பருப்பு,

செய்முறை :

முதலில் குக்கரில் முருங்கை கீரையை நன்றாக கழுவி போட்டுக் கொள்ளவும். பின்பு அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், தக்காளி, சீரகம், மல்லி விதைகள், இடித்து வைத்த இஞ்சி, பூண்டு மற்றும் பாசி பருப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பின்பு நன்றாக வெந்ததும் குக்கர் மூடியை திறந்து ஆற விடவும்.

நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த முருங்கை கீரை கலவைகளை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்பு இதை ஒரு டம்ளரில் ஊற்றி மிளகு மற்றும் சீரக தூள் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்ட சத்துகளும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Posts

Leave a Comment