சமையல் குறிப்புகள்..

by Lifestyle Editor

அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி போட்டு அதன் மேல் பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

சிறிய வகை மீன்களுக்கு அதிக மசாலா சேர்க்காமல் உப்பும், மிளகாய்த்தூளும் கலந்தாலே சுவை அதிகமாக இருக்கும்.

தக்காளி சட்னி தயார் செய்யும் போது வெங்காயம்,தக்காளியின் அளவு குறைவாக இருந்தால் இரண்டையும் வதக்கியவுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்க்க சட்னியின் அளவு கூடும்.

கறிவேப் பிலையை காம்புடன் பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் பசுமை மாறாமல் இருக்கும்.

பூண்டுவை கேரட் துருவுவதில் துருவினால் அதன் தோல்கள் உரிந்து, உரிக்க சுலபமாக இருக்கும்.

ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

Related Posts

Leave a Comment