தம்பதியர் இருவரும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய இதை ஃபாலோ பண்ணுங்க…

by Lifestyle Editor

மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையில் உச்சகட்டம் இன்பம் என்பது உடல் மற்றும் உணர்வு இணைந்த சக்தி வாய்ந்த புணர்வு என்று சொல்லலாம். இந்த புணர்ச்சி நிலை உச்சகட்ட பாலியல் தூண்டுதலின் விளைவு என்று சொல்லலாம். இந்நிலை தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் எண்டோர்பின்கள் எனப்படும் நல்ல இராசயனங்களின் வெளியீடு போன்றவற்றை உள்ளடக்கியது. தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் உச்சகட்ட இன்பத்தை அடைய உதவும்.

உடலானது பாலியல் பதற்றம் மற்றும் அழுத்தத்தை வெளியிடும் போது பாலியல் தூண்டுதலின் உயரம் அல்லது உச்சநிலை ஆகும். இது பிறப்புறுப்பிலும் உடலிலும் தீவிரமான இன்ப உணர்வுகளை உள்ளடக்கிய நிலை. இது சில விநாடிகள் மட்டுமே நீடிக்க கூடியது. உடலில் பாலியல் மண்டலங்களின் பாலியல் தூண்டுதலின் போது உச்சியை உண்டு செய்கிறது.

இது ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு கிளிட்டோரிஸ், பிறப்புறுப்பு, மார்பக காம்புகள் போன்ற இடங்களில் உணரலாம். ஆசை, உற்சாகம். புணர்ச்சி, உச்சி என நான்கு நிலையை அடைவது. இன்றைய நிலையில் பல தம்பதியர் உடலுறவில் போதுமான திருப்தி இல்லை என்னும் புகாருடன் இருக்கிறார்கள். சமயங்களில் இதற்கு தீர்வு காண விரும்பாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விவாகரத்து வரை கூட செல்வதுண்டு. தாம்பத்தியத்தில் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

தாம்பத்தியம் என்பது மோசமானது அல்ல. ஏனெனில் திருமணத்துக்கு பிறகும் மெத்த படித்தவர்களும் கூட இன்னும் தாம்பத்தியத்தில் முழுமையான புரிதலோடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தாம்பத்தியம் என்பது குழந்தைப்பேறுக்கு மட்டும் என்று இருப்பவர்களும் கூட உண்டு. தாம்பத்தியத்தில் இதை செய்ய வேண்டும் இதை செய்ய கூடாது என்ற எண்ணம் இருவருக்கும் உண்டு. இது தவிர்க்க வேண்டும். தாம்பத்தியம் என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ளவே என்பதால் தாம்பத்தியம் குறித்த அச்சமோ தயக்கமோ வெட்கமோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் ஒவ்வொரு முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதும் இருவரும் உச்சகட்டத்தை அடையலாம்.

தாம்பத்தியம் என்பது உடலும் மனமும் சம்பந்தப்பட்டது. ஆண், பெண் இருவரும் அவ்வபோது வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அது தாம்பத்தியத்தின் போது உறவு நேரத்தில் பாதிப்பை உண்டு செய்யலாம். சின்ன விஷயத்தை கூட பெரிது படுத்தும் போது உறவு மகிழ்ச்சியாக இருக்காது.

ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியமோ மன ஆரோக்கியமோ குன்றும் போது ஒருவரை ஒருவர் வற்புறுத்துதல் கூடாது. அப்படி செய்தால் அது சுவாரஸ்யம் இல்லாத தாம்பத்தியமாக மாறலாம்.

ஆண் தன் உறுப்பு சிறியதாக உள்ளது, இதை கொண்டு திருப்தி படுத்த முடியுமா என்று கவலை கொள்வதும், பெண் தன் மார்பகம் சிறியதாக இருக்கிறதோ, தளர்ந்து போய் விட்டதோ என்று நினைப்பதும் தாம்பத்தியத்தின் மீதான ஈடுபாட்டை குறைக்க செய்யும். இருவரும் தூங்கும் முன்பு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு மூச்சுபயிற்சி செய்யலாம். மனதை அமைதியாக வைத்துகொள்வதோடு நிம்மதியாக தாம்பத்திய உறவில் ஈடுபடவும் முடியும்.

கெகல் உடற்பயிற்சி அல்லது பெல்விக் பயிற்சி Pelvic floor . இது 1948 ஆம் ஆண்டு Arnold Kegel என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது இடுப்புத்தளத்தின் தசைகளை வலுப்படுத்துவதற்காக கண்டறியப்பட்டது. இவர் மகப்பேறு மருத்துவர். பெண் குழந்தை பிறந்த பிறகு சிறுநீர் கட்டுப்பாடில்லாமல் வெளியேறுவதை கட்டுப்படுத்த உதவுகிறது.

இடுப்பு தள தசைகளின் சுருக்க வலிமையை அளிக்க செய்கிறது. இதை உடலுறவு மேம்படுத்தும் உடற்பயிற்சியாக பயிற்சிக்காக பரிந்துரைக்கப்படுகிறது. இது உச்சகட்டத்தை அடைய உதவுவதாக கண்டறியப்பட்டது.

use it or lose it என்று உடலுறவில் ஓர் விதி உண்டு. அதாவது பயன்படுத்து அல்லது இழந்துவிடு என்று சொல்வார்கள். அதாவது நீண்ட வருடம் தாம்பத்தியம் செய்யாமல் இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் உறவில் ஈடுபடும் போது அவர்களால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், மனைவியை பிரிந்து வெளி இடங்களில் வேலை செய்யும் சூழலில் வசிக்கும் ஆண்/ பெண், சுய இன்பம் செய்வதன் மூலம் தங்கள் தாம்பத்திய உறவை இழக்காமல் இருக்க முடியும். விவாகரத்து ஆனவர்கள், மனைவி/ கணவனை இழந்தவர்கள் மறுமணம் செய்யும் போது திடீரென்று தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது.

திருக்குறள் ஒன்றில் நிறைய பொருள்களை பார்த்திருக்கிறேன். ஒன்று காதுக்கு இனிமையாக இருந்துள்ளது. ஒன்று சுவையில் இனிமையாக உள்ளது. ஒன்று பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இப்படி ஒவ்வொரு பொருளும் ஒன்றோ அல்லது இரண்டு சுவைகளையோ கொண்டுள்ளது. ஆனால் காதலியான நீ தான் ஐம்புலன்களுக்கும் சுவையை கூட்டுகிறாய் என்று பொருள் உண்டு.

தாம்பத்தியத்தில் இந்த ஐந்து புலன்களையும் பயன்படுத்தினால் தான் தாம்பத்தியம் சுவை கூடும்.

ஆண் பெண் இருவருக்கும் உணர்ச்சி தரும் இடங்கள் அந்தரங்க உறுப்புகள் மட்டும் அல்லாமல் காது மடல்களிலும் கூட உண்டு. இப்படி ஒவ்வொருவருக்குமான உணர்ச்சி மிக்க இடங்களை தேடி தாம்பத்தியம் செய்யும் போது அது மகிழ்ச்சியான தாம்பத்தியமாக இருக்கும்.

உறவின் போது வேகமாக இல்லாமல் பொறுமையாக செய்ய வேண்டும். உறவில் முன் விளையாட்டுகள் இருக்க வேண்டும்.

​தாம்பத்தியம் தினமும் ஒரே மாதிரி இல்லாமல் வெரைட்டியாக செய்ய வேண்டும். 550 விதமான பொசிஷன்கள் உண்டு. இதில் இருவருக்கும் பிடித்தமான நிலைகளை செய்யலாம்.

தாம்பத்தியத்தில் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். பெண்ணுக்கு பிடித்ததையும், பிடிக்காததை ஆணும் ஆணுக்கு பிடித்ததையும் பிடிக்காததை துணையான பெண்ணும் அறிந்துகொண்டால் தாம்பத்தியம் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்.

Related Posts

Leave a Comment