பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்..

by Lifestyle Editor

பஞ்சமி வழிபாடு என்று சொன்னாலே வாராஹி அம்மன் தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் திதி மற்றும் குறிப்பிட்ட மாதத்தில் அவதரித்து இருப்பார்கள்.

அந்த வகையில் பஞ்சமி திதியில் தான் வராகி அம்மன் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இந்த வருடம் பஞ்சமி திதி தேதி – 30-03-2024, சனி (பங்குனி மாதம் 17, தேய்பிறை, பஞ்சமி). அன்று வருகிறது. தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்யும் முறை மற்றும் பலன்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

வாராஹி அம்மனை முதல் முதலில் வழிபட தொடங்குபவர்கள் பஞ்சமி திதியை தேர்வு செய்து. அதிலிருந்து தொடங்கலாம்.

ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வருவது முதல் வேண்டுதல்களை நிறைவேற்றும்.

சில வாரங்களிலேயே நீங்கள் மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடியும் என்றும் கோவில் குருக்கள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

பஞ்சமி திதி அன்று வாராகியை வழிபட்டால் எதிரிகள் காணாமல் போவார்கள். எதிர்ப்பு, பகை,தடைகள் உள்ளிட்டவை நீங்கும்.

இதேபோல கண் திருஷ்டி. பில்லி. சூனியம் உள்ளிட்ட எதிர்மறையான சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால் வாராகி அம்மனை பஞ்சமி திதியில் தொடர்ந்து வழிபட்டு வருவது எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட வாராகி அம்மனை தொடர்ச்சியாக கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள். அகல் விளக்கை வாங்கி அம்மனை மனதார நினைத்து. வீட்டிலேயே அகல் விளக்கு ஏற்றி உங்களுடைய வேண்டுதல்களை முன்வைக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் வாராகியம்மனுக்கு விளக்கேற்றி செம்பருத்தி. செவ்வரளி, பானகம். உளுந்து வடை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு. மாதுளை, சிவப்பு அவல், ஏதேனும் இனிப்பு. பாயசம் அல்லது வெல்லம் போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்யலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கோவில் அர்ச்சகர் கணேச குருக்கள் தெரிவிக்கின்றார்.

Related Posts

Leave a Comment