கேழ்வரகு கூழ்..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்

தயிர் – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 5

பச்சை மிளகாய் – 1

இஞ்சி துண்டு – 1

கருவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவினை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

தண்ணீர் சூடானதும் ஏற்கனவே நாம் கலந்து வைத்துள்ள கேழ்வரகு மாவினை ஒருமுறை கலந்து இதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனை கைவிடாமல் 10 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இவை நன்றாக ஆறியவுடன் இதனுடன் இடித்த பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டினை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து இதனுடன் குடிப்பதற்கு ஏற்றவாறு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்தால் ஆரோக்கியமான கேழ்வரகு கூழ் ரெடி.

Related Posts

Leave a Comment